ரவுடி ஜான் கொலை வழக்கு தொடர்பாக மேலும் நால்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
கடந்த 19-ம் தேதி சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்பவர், தனது மனைவியுடன் சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது நசியனூர் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக இதுவரை 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், நால்வர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த 2020-ம் ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி செல்லதுரையின் மனைவி ஜான்சி உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க வேண்டும் என ஜானின் மனைவி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.