திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
கடந்த 31 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், ஒரு கோடியே 49 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பணம், 650 கிராம் தங்கம், சுமார் 13 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.