வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையிலேயே வருமான வரி நிவாரண வரம்பு 12 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தேதியிட்ட பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் 14 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முன்மொழிந்தார்.
அதில் 8 லட்சம் கோடியை வருடத்தின் முதல் பாதியில் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2026-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உண்மையில் மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் வரிகளின் இறுதிப் பயனாளிகள் மாநிலங்களே எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.