கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடங்களை அளவீடு செய்து முறைப்படுத்தி வழங்கவில்லை கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியரை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.