இந்தோனேசியாவில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
முன்னாள் ராணுவ தளபதி பிரபாவோ, தற்போது இந்தோனேசியாவின் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் ராணுவச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, ராணுவ அதிகாரிகளாக உள்ளவர்கள், குறைந்தபட்சம் 5 அரசு துறைகளில் கூடுதல் பதவியை வகிக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகரில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் தெருக்களில் கூடி பாட்டில் குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கலைத்தனர்.