நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 682 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 682 கிலோ கஞ்சா பொட்டலங்கள், நாங்குநேரி அடுத்த பொத்தையடி தனியார் நிறுவனத்தில் வைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.