சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலாக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தனது வாழைத் தோட்டத்திற்குச் சென்றபோது அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்பகுதியில் மின்கம்பிகள் தரமற்று இருப்பதாகவும் இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இந்த துயர சம்பவம் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த பார்த்தசாரதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.