காரைக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடை அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி மாநகராட்சியில் வரி செலுத்தாத கடைகளுக்கு முன்பு குப்பை தொட்டிகளை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
இது குறித்து மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கடை அடைப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.