ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் 8வது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 33 முறை மோதியுள்ள சூழலில், அதில் 21 முறை சென்னை அணியும், 11 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணி இதற்குப் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.