லக்னோ அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிடத்திலிருந்த ஐதராபாத் அணி, 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தனது முதல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பஞ்சாப் அணி 3வது இடத்திலும், சென்னை அணி 4வது இடத்திலும், டெல்லி அணி 5வது இடத்திலும் உள்ளன.
லக்னோ அணிக்கு எதிரான தோல்வியால் ஐதராபாத் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், கொல்கத்தா, மும்பை, குஜராத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் கடைசி 4 இடங்களில் உள்ளன.