தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் 336 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான ஊதியம் 336 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த நிதி ஆண்டை விட 17 ரூபாய் அதிகம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















