நிலநடுக்கம் ஏற்பட்ட மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இரு நாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாகப் பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ள அவர், இரு நாட்டு அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், உதவி மற்றும் மீட்புப் பணிகளுக்காக இந்திய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படியும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.