கோவையில் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சாலை பூ மார்கெட் அம்மா உணவகம் அருகே சோதனையில் ஈடுபட்ட போது, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா, மூன்று கார்கள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட 12 வங்கிக்கணக்களும் முடக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.