கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலளித்துள்ளார்.
அதிகபட்சமாக கடந்த ஆண்டில் மட்டும் 526 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2015 முதல் 2025 மார்ச் வரையிலான கால கட்டத்தில் 2 ஆயிரத்து 839 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.