செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தாம்பரம் மாநகராட்சியில் 3-வது மண்டல குழு தலைவராக பணியாற்றி வந்த ஜெயபிரதீப், தனக்கு எதிராக உள்ள மாமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் எந்த வளர்ச்சி பணிகளையும் நடைபெற விடாமல் தடுப்பதாக புகார்கள் எழுந்தன.
அதனடிப்படையில் அவரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.