ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்த தம்பதி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வைகை நகரை சேர்ந்த கார்த்திக்கும், அவரது மனைவி சர்மிளாவும், ஊருணியில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், உறவினர்கள் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தம்பதியின் உடல்களை மீட்டனா்.