புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீரனூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நள்ளிரவில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து மின் வெட்டை சரி செய்வதற்காக ஊழியர்கள் சென்றனர்.
அப்போது மின்கம்பத்தில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் திருடப்பட்டு, உதிரி பாகங்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.