ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி, இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து வழிபட்டனர்.
பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 69-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை ஒட்டி, நகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து, பக்தர்கள் மேள தாளங்களுடன் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அந்த வகையில், எமனேஸ்வரம் பகுதியில் இஸ்லாமிய இளைஞர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக ஏந்தி வந்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.