சேலத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண்ணை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, போலீசார் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய் பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யா என்ற பெண், தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி 2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அரியலூர் மாவட்டம் கீழ ராயபுரத்தை சேர்ந்த அரவிந்த்சாமி என்ற மாற்றுத்திறனாளி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
தான் சேலம் மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகியாக உள்ளதாகக் கூறிய வித்யா, சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பணியை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாக, அரவிந்தசாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்த செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது. இந்நிலையில், வித்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், வேறு யாரிடமும் அவர் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.