கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர் வழியாகக் கடலில் கலக்கிறது.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு பெருநகர கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் தமிழக பகுதியான கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மாசடைந்து நுரையுடன் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறும் விவசாயிகள், தென்பெண்ணை ஆற்றின் நடுவே கொடியாளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.