கோவையில் ஆட்டோ திருடிய கும்பலுக்குச் சாதகமாக காவல்துறையினர் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷணன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ராதாகிருஷ்ணன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீசாருக்கு அடையாளம் காட்டியும் அவர்களைக் கைது செய்யாமல் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.