10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், நம் நாட்டில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளதாகவும் குறிப்பிட்டார்.