காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆன்லைன் ஆப் மூலம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தக் கோரி தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலிலிருந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரதராஜ புரத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவருடைய மனைவி புனிதா ஆகியோர் ஆன்லைன் மூலம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர்.
வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததாலும், கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததாலும், புனிதா மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மின்விசிறியில் தூக்கிட்டு புனிதா தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.