திருநெல்வேலியில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்து மின் கம்பம் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து சுத்தமல்லிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேட்டை அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து, மின் கம்பம் மீது மோதியது.
இதில் 10 பேர் காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பழைய பேருந்துகளைத் திரும்பப் பெற்று, புதிய பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.