அமெரிக்காவின் டெக்ஸாசில் கனமழைக்கு ஆறு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், கனமழையால் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.