கொல்கத்தா- லக்னோ இடையிலான ஆட்டம் வரும் 6-ம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 8-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி ராம நவமி வருவதையொட்டி அன்றைய தினத்தில் கொல்கத்தாவில் பாஜக சார்பில் பேரணி நடைபெறவுள்ளது.
இதையொட்டி கொல்கத்தா முழுவதும் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டியுள்ளது. அதே தினத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், மற்றொரு தேதிக்குப் போட்டியை மாற்றி அமைக்க வேண்டும் எனக் காவல் துறை வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், வரும் 6-ம் தேதியில் நடைபெறும் போட்டியானது ஏப்ரல் 8-ந்தேதி மாலை 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.