தெலுங்கு நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடித்துள்ள அர்ஜுன் s/o வைஜெயந்தி படத்தை இயக்குனர் பிரதீப் சிலுக்குரி இயக்குகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாகச் சாய் மஞ்சரேக்கர் நடிக்கிறார். மேலும், நடிகை விஜய சாந்தி, நடிகர்கள் சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘நயல்தி’ என்ற பாடல் வரும் 31-ம் தேதி வெளியாகிறது.