நீலகிரியில் அரசுப் பேருந்து சக்கரத்தில் பயணியின் கால் சிக்கி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோத்தகிரியைச் சேர்ந்த நேசமணி என்பவர் மது அருந்திவிட்டு அரசு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது ஓடிக் கொண்டிருந்த பேருந்திலிருந்து இறங்க முயன்ற நேசமணி, தடுமாறி கீழே விழுந்தார்.
இதையடுத்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் அவரது கால் சிக்கிக் கொண்டது. இதில் நேசமணியின் இடது கால் முறிந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.