இந்தியா சார்பில், அனுப்பி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு சென்றடைந்தன.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போலச் சரிந்தன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, “ஆப்ரேஷன் பிரம்மா” என்ற திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
அதன்படி இந்தியாவிலிருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதில் 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு சென்றடைந்தன.