சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் 5 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.