கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யக்கோரி அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருக்கோவிலூருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திருக்கோவிலூர் வந்த அமைச்சர் பொன்முடி புதிய பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த கணேஷ் என்ற சமூக ஆர்வலர், பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தனி நபருக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்தை தேர்வு செய்வதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதியோர்கள் வந்து செல்வது கடினம் என்று கூறி அமைச்சரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.