யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இது நம்பிக்கை மற்றும் துடிப்புடன் தொடர்புடைய ஒரு சிறப்புப் பண்டிகை என தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என்றும், அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பு மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும் என கூறியுள்ளார். மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வு தொடர்ந்து வளர்ந்து செழிக்கட்டும் எனறும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.