18-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இன்றைய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில், 13-ல் ஐதராபாத் அணியும், 11-ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. தனது முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, 2-வது போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், சென்னை அணி ஆடும் 3-வது போட்டி அசாமின் கவுகாத்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் தோனி தாமதமாக இறங்காமல் முன்னதாகவே களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.