தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உச்சி பொத்தை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், தனது குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்கு சென்றிருந்தார்.
மீண்டும் வீடு திரும்பியபோது 25 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.