சேலத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 2 ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
ததால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள 28-வது வார்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இதனால் நோய் வாய்ப்படும் அப்பகுதி மக்கள், அருகில் மருத்துவமனை இல்லாததால் சேலம் அரசு மருத்துவமனையை நாடிச்செல்லும் அவலநிலை நிலவுகிறது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.