எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் சுமார் 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் நிலையில், புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன.
அதில், எல்பிஜி லாரிகளுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளை தளர்த்தக்கோரி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் டேங்கர் லாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முடிவு எட்டப்படாததால், கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
4-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தத்தால் தென்னிந்திய மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.