மராத்தி புத்தாண்டை முன்னிட்டு நாக்பூரில் பாரம்பரிய நடனமாடி சிறுமிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்து சந்திர நாட்காட்டியின்படி சைத்ரா மாதத்தின் முதல் நாள், மராத்தி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. குடிபத்வா என்றழைக்கப்படும் மராத்தி புத்தாண்டை வசந்த காலத்தின் வருகையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பாண்டு மராத்தி புத்தாண்டையொட்டி நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமிகள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.