தவெக தலைவர் விஜய் வசதிக்காக பனையூர் தேவைப்படும் போது மக்கள் வசதிக்காக பரந்தூர் விமான நிலையம் தேவைப்படாதா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர் வழங்கினார்.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக- தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விஜய் விமர்சித்ததை கடுமையாக எதிர்த்தார்.