ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமாக்யா அதிவேக விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூரிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரயில் மகாநதி பாலத்தைக் கடந்த போது திடீரென தடம்பிரண்டது. ரயிலின் 11 ஏசி பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து இறங்கியதில் 8 பயணிகள் காயமடைந்தனர்.
இதில், ஒருவர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் தடம்புரண்டதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கட்டாக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது ரயில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.