திண்டுக்கல் அருகே காரில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வாழைக்காய் பட்டி பிரிவு பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது நத்தம் நோக்கி சென்ற காரின் முன் பகுதியில் சிக்கிய இருசக்கர வாகனம் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இதை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் – நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். . அப்பகுதியில் போதுமான மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதே விபத்திற்கு காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.