அமெரிக்காவால் எங்களை வாங்க முடியாது என்று கிரீன்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி வருகிறார். அதற்கான முயற்சிகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரெடரின் நீல்சன், அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்றும் என டிரம்ப் கூறுகிறார் என்றும், ஆனால் அது ஒருபோதும் நடக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.