சீன கார் நிறுவனத்தின் 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அண்புமனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சீன கார் நிறுவனம் 85 ஆயிரம் கோடி முதலீட்டில் கார் உற்பத்தி ஆலையை ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் தமிழகத்தை புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, நடப்பாண்டில் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆராய வேண்டும் என்றும், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான திறனை அரசு அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.