நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் திரைப்பட ஷூட்டிங்கள் எடுக்க ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான பூங்காக்கள், புல்வெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காட்சி முனைகள் அமைந்துள்ளன. அவ்விடங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு திரைப்பட ஷூட்டிங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோடை காலத்தை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திரைப்பட ஷூட்டிங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.