பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பால திறப்பு விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் தூக்குப் பாலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டபத்திலிருந்தே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பழைய பாலத்துக்கு அருகிலேயே ஆசியாவிலேயே முதன் முறையாக புதிய செங்குத்து தூக்குப் பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பாலத்தை ஏப்ரல் 6-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.