சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் தங்கியிருந்தனர்.
அண்மையில் அவரது வீடு பூட்டியிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேசன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உடன் தங்கியிருந்த கார் ஓட்டுநர் கார்த்திக் சிவகங்கையில் இருப்பதாகக் கிடைத்த தகவல் பேரில், அவரை தேடி தனிப்படை விரைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.