சென்னை காட்டுப்பாக்கம் அருகே பூசணிக்காய் சுற்றுவது குறித்து வடமாநில தொழிலாளியிடம் திமுக எம்எல்ஏ இந்தியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் மட்டும் இந்தியில் பேசலாமா என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பூசணிக்காயை சுற்றியபோது வடமாநில தொழிலாளிடம் எம்எல்ஏ கிருஷ்ணசாமி இந்தியில் பேசினார்.
இந்நிலையில், பூசணிக்காயை எப்படி சுற்றவேண்டும் என இந்தியில் எம்எல்ஏ பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனிடையே, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் மட்டும் இந்தியில் பேசலாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.