தொடர் விடுமுறையை ஒட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் ரம்ஜான் தொடர் விடுமுறையின் காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அவர்கள் பரிசல் பயணம் மேற்கொண்டும், ஆயில் மசாஜ் செய்தும், பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். மேலும், மீன் உணவுகள் உள்ளிட்டவையும் அமோகமாக விற்பனையானதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.