கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையின்போது ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மட்டிகைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும், திலகவதி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரியும் திலகவதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக இருதரப்பையும் நேரில் அழைத்துக் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டபோது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, திலகவதியின் உறவினராக சுப்ரமணி என்பவர் மீது சுரேந்திரன் உறவினர் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சுப்ரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.