நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை, மரத்தில் இருந்து பலா பழத்தை லாவகமாகப் பறித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அத்திக்குன்னா பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் பலாப்பழம் பழுத்திருப்பதைக் கண்ட காட்டு யானை, வீட்டின் கம்பவுண்டுக்குள் நுழைந்தது.
ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு மற்றொரு பழத்தைத் தும்பிக்கையில் வைத்தபடி, காம்பவுண்ட் இரும்பு கேட்டை தூக்கி எறிந்துவிட்டு வெளியே சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.