விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் உள்ள போலி முகநூல் கணக்கை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஆட்சியர் ஜெயசீலன் புகைப்படத்துடன் கூடிய போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.
இச்சம்பவம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இதுபோன்ற மோசடிகளை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.